ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் சங்கர நேத்ராலயாவின் நடமாடும் கண் மருத்துவ திட்டதை பார்வையிட்டு வாழ்த்துதல்.
சங்கர நேத்ராலயாவும் ஐஐடி மத்ராஸும் இணைந்து உருவாக்கிய நடமாடும் கண் மருத்துவ பிரிவை சேர்ந்தோர் காஞ்சிபுரதிற்கு வந்து பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கரசார்ய ஸ்வாமிஜி அவர்களிடமும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிஜி அவர்களிடமும் அனுக்ரஹம் பெற்றனர். மருத்துவ குழுவினரும் தொழில் நுட்ப வல்லுநர்களும், கிராமிய மக்களின் கண் அறுவை சிகிச்சைக்காக உருவாக்கிய நூதன மருத்துவ வசதிகள் அடங்கிய பேருந்தின் முக்கிய அம்சங்களை ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளிடம் விளக்கினர். பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் அவர்களது புது முயற்சியையும், மருத்துவ குழுவினரையும், திட்டத்தில் பங்கு கொண்ட மற்ற உறுப்பினர்களையும் ஆசிர்வதித்தார்கள். இதற்கிடையே பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கரசார்ய ஸ்வாமிஜி அருகே அமைந்திருந்த கௌசிகேஷ்வரர் திருகோயில் சென்று பார்வையிட்டார்.மிகவும் தொன்மையான அந்த திருகோயில் முழுவதும் கருங்கல்லால் மட்டுமே கட்டப்பட்டது.